தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு!
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ந்தேதியன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அகவிலைப்படி உயர்வு இம்மாதம் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com