பெரம்பலூரில் 31 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

பெரம்பலூரில் 31 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூரில் 31 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 29 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும் என மொத்தம் 2 பேர் கொரேனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அவர்களில் 3 பேர் மருத்துவமனைகளிலும், 28 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் ஆண்களும், 20 பேர் பெண்களும் ஆவார்கள். மேலும் 75 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com