குமரியில் மெகா முகாம்: ஒரே நாளில் 31,784 பேருக்கு தடுப்பூசி

குமரியில் நடந்த மெகா முகாமில் ஒரே நாளில் 31,784 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குமரியில் மெகா முகாம்: ஒரே நாளில் 31,784 பேருக்கு தடுப்பூசி
Published on

நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1,780 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக 450 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மருத்துவக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று விசாரித்து தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், கோட்டார் ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம்களில் குறைவான அளவிலயே கூட்டம் இருந்தது. அதில் பொரும்பாலானோ 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்த வந்திருந்தனர். மேலும் பூஸ்டா டோஸ் செலுத்திக்கொள்ளவும் அதிகளவிலான பொதுமக்கள் வந்திருந்தனர்.குமரி மாவட்டம் முழுவதும் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் முதற்கட்ட தடுப்பூசியை 2 ஆயிரத்து 314 பேரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 5 ஆயிரத்து 728 பேரும், பூஸ்டர் டோசை 23 ஆயிரத்து 742 பேரும் என மொத்தம் 31 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com