

சென்னை,
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 3,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20, 21 ஆகிய தேதிகளில் 1,540 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20, 21 ஆகிய தேதிகளில் 390 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது
சென்னை மாதவரத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 20, 21 ஆகிய தேதி 290 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 22/1/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 875 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.