3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பணகுடி அருகே 3,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டா கலா, சப்-இன்ஸ்பெக்டா காத்திகேயன் மற்றும் போலீசார் நெல்லை-நாகர்கோவில் சாலையில் பணகுடி அருகே காவல்கிணறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடுவேனில் வந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் லோடுவேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். போலீசார் அந்த லோடுவேனில் சோதனை செய்தபோது, அதில் 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை லோடுவேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் மற்றும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com