பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த 33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு


பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த 33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
x

மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் குரங்குகள் விடப்பட்டுள்ளது.

நெல்லை,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.

இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதிகளில் குரங்குகளை பிடிக்க பொறி வைத்தனர்.

இந்த நிலையில் 33 குரங்குகள் பாபநாசம் வனச்சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story