விஜய் முதல்-அமைச்சராக வேண்டி தவெகவினர் செய்த செயல்...இணையத்தில் வேகமாக பரவும் காட்சிகள்


330 km padayatra to pray for Vijay as chief minister...worship at Velankanni Mata Temple
x

தவெகவினர் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரையாக வந்தனர்.

வேளாங்கண்ணி ,

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026-ல் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என வேண்டி கொண்டு, அவரது தொண்டர்கள், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 330 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து வழிபாடு செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூர், மெத்தவாடி தவெக கட்சியை சேர்ந்த கானா ஆகாஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 8 பேர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026-ல் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என வேண்டி கொண்டு, வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரை ஆக வந்தனர்.

330 கிலோ மீட்டர் தூரம் 10 நாட்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த இவர்கள், புனித வெள்ளி அன்று வேளாங்கண்ணி புதிய பேராலயத்தில் இருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதையில், முழங்காலால் முட்டி போட்டு 750 மீட்டர் சென்று விஜய் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற பேனரை கைகளில் ஏந்தியவாறு பிரார்த்தனை செய்தனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

1 More update

Next Story