வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு

வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு
Published on

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மகாராணி வரவேற்று பேசினார். இந்த முகாமில் 181 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தன. முகாமில் 2,988 பெண்கள் உள்பட 4,985 பேர் வேலை கேட்டு கலந்து கொண்டனர். இதில் 330 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 677 பேர் 2-ம் கட்ட நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 43 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிறைவு விழாவில் மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார வணிக வள மையம் நிதி திட்டத்தின் கீழ் சிறு குறு தொழிலுக்கான கடனுதவி ரூ.50 ஆயிரம் வீதம் 10 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com