மத்திய கிழக்கில் சிக்கிய 345 மீனவர்கள் மீட்பு - பிரதமருக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் சிக்கிய 345 மீனவர்கள் மீட்பு - பிரதமருக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;-

போர் நடைபெறும் மத்திய கிழக்கு நாடுகளில் தவித்து வந்த 327 இந்திய தமிழ் மீனவர்கள் உட்பட 345 இதர இந்திய மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் திரும்பச் செய்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரான்-இஸ்ரேல் போரினால் பல்வேறு உலக நாடுகள் செய்வதறியாது தவித்து வரும் வேளையில், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கட்டுக்கோப்பாக நிர்வகித்து வருவதோடு, வெளிநாடுகளில் சிக்கியிருந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்திருப்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நனிசிறந்த தலைமைப் பண்பை எடுத்தியம்புகிறது என்று சொன்னால் அது மிகையாகாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com