ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 345 பேர் மீட்பு

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 345 பேர் மீட்பு
Published on

சென்னை,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, மத்திய கிழக்கில் வசித்து வரும் இந்தியர்கள் போரால் நாடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானில் உள்ள இந்த்யர்கள் நாடு திரும்பவதில் சவால் நிலவி வருகிறது. இதையடுத்து, ஈரானில் இருந்து தரைவழியாக அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து சென்று அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 345 பேரை மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 345 பேரும் தரைவழியாக அண்டைநாடான அர்மீனியா அழைத்து செல்லப்பட்டனர். அதன்பின்னர் அர்மீனியாவில் இருந்து விமானம் மூலம் தமிழக மீனவர்கள் 345 பேரும் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

நாடு திரும்பிய தமிழக மீனவர்கள் 345 பேரையும் மத்திய மந்திரி பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய தலைவர்கள் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com