

சென்னை,
உடல்நலக்குறைவால் உயிரிழந்த 35 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பழனிவேல், வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த அமானுல்லா, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன், புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த பாலமனோகரன், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜமூர்த்தி, கபிஸ்தலம் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன், பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேகர்.
திருச்சி, பெரம்பலூர்
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகம், பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த புஷ்பலதா மற்றும் மங்களமேடு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல் முருகையா, பெரம்பலூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த விஜயன், விழுப்புரம் மாவட்டம், எடைக்கல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்வக்குமார், ஆரோவில் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த உதயகுமார், திருச்சி பாலக்கரை போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குமரவேல், திருச்சி ஆயுதப்படை 1-ம் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த செல்லத்துரை.
சென்னை போலீஸ்காரர்கள்
சென்னை பெருநகரக் காவல், சேத்துப்பட்டு காவல்நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நீலமேகன், ஆர்.கே. நகர் காவல்நிலையக் குற்றப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன், கோயம்பேடு காவல்நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன், கோயம்பேடு காவல்நிலையப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த வேல்முருகன், மடிப்பாக்கம் காவல் நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ், மாங்காடு காவல்நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசலு, நுண்ணறிவுப் பிரிவில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த நித்யா.
காஞ்சீபுரம், மதுரை
கோவை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், சுல்தான்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செந்தில்குமார், துடியலூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாஸ்கரன்,
காஞ்சீபுரம் மாவட்டம், சித்தாமூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த விஸ்வநாதன், ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தட்சிணாமூர்த்தி, மதுரை மாவட்டம் ஆயுதப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அய்யாபொன்னு, உசிலம்பட்டி போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரபாண்டியன், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம், மோகனூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகன், வாழவந்திநாடு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுரேஷ்.
தலா ரூ.3 லட்சம்
திருப்பூர் மாவட்டம் குற்ற ஆவணக் காப்பகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பாபு, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திருப்பதி ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 35 போலீசாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 35 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.