உண்டியல்கள் மூலம் ரூ.35¾ லட்சம் வருமானம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.35¾ லட்சம் வருமானம் கிடைத்தது.
உண்டியல்கள் மூலம் ரூ.35¾ லட்சம் வருமானம்
Published on

ஆனைமலை

ஆனைமலை உப்பாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் சயன நிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தட்டு காணிக்கையாக ரூ.13 லட்சத்து 95 ஆயிரத்து 579, நிரந்தர உண்டியல்களில் ரூ.21 லட்சத்து 73 ஆயிரத்து 478 என மொத்தம் ரூ.35 லட்சத்து 69 ஆயிரத்து 57 வருமானம் கிடைத்து உள்ளது. மேலும் 120 கிராம் தங்கம், 360 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து, உதவி ஆணையர் ரா.விஜயலட்சுமி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலா, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் பா.சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் மற்றும் பக்தர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com