நாலுமாவடியில் 350 கிராம் கஞ்சா, 2 பைக்குகள், 2 செல்போன்கள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாலுமாவடி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கஞ்சா பறிமுதல், கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 350 கிராம் கஞ்சா, 2 பைக்குகள், 2 செல்போன்களை பறிமுதல் செய்து, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாலுமாவடி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக 2 பைக்குகளில் வந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் நல்லூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 28), அலேக்காபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(20) ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் சட்ட விரோதமாக 350 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

350 கிராம் கஞ்சா, 2 பைக்குகள், 2 செல்போன் பறிமுதல்:

இதுதொடர்பாக குரும்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மம்முது வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 350 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடமிருந்து 2 பைக்குகள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com