கடந்த 9 மாதங்களில் தெற்கு ரெயில்வேயில் 3,570 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தீபாவளி, பொங்கல் உள்பட பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 9 மாதங்களில் தெற்கு ரெயில்வேயில் 3,570 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் ரெயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உயர்ந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் மற்றும் திட்டங்கள் அறி விக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களுடன் கூடுதல் சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு, சிறப்பு ரெயில் சேவைகள் நீட்டிப்பு உள்பட பல்வேறு வழிவகைகள் பயணிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. முக்கிய வழித்தடங்கள் மற்றும் எந்த பகுதிகளில் கூடுதல் ரெயில்கள் தேவைப்படுகிறது? என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்பட பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் நடப்பு நிதியாண்டில் (2025-26) ஏப் ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 3 ஆயிரத்து 570 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 40 எக்ஸ்பிரஸ் ரெயில் களில் ஏ.சி., 2-ம் வகுப்பு பெட்டி, முன்பதிவில்லாத பெட்டிகள் என கூடுத லாக 62 பெட்டிகளும் தேவைக்கு ஏற்ப இணைத்து இயக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களில் 3,570 சிறப்பு ரெயில்கள் என்பது தெற்கு ரெயில்வேயில் இதுவே முதல்முறை எனவும், வரும் காலங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com