ஒரு வாரத்தில் கஞ்சா விற்ற 36 பேர் கைது

நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு வாரத்தில் கஞ்சா விற்ற 36 பேர் கைது
Published on

ஊட்டி

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா விற்பனையும், கஞ்சா பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த போதை பழக்கத்தினால் குற்ற செயல்கள் மற்றும் தற்கொலை சம்பவங்களிலும் மாணவ-மாணவிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகார்களும் அதிகரிக்க தொடங்கியதால் தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கஞ்சா வேட்டை 3.0 நீலகிரி மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும், கடந்த டிசம்பர் 12-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று முதல் நேற்று முன்தினம் வரை நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 29 வழக்குகள் பதிவு செய்து 36 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பும் பணியில் நீலகிரி மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com