நெல்லை மாநகரில் 3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்: 4 பேர் கைது

திருநெல்வேலி மாநகரம் டவுண் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்; 4 பேர் கைது.
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாநகரில் டவுண், பெருமாள்புரம் பகுதிகளில்சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.7 கிலோ கஞ்சா, பைக், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் ரோந்து பணி

திருநெல்வேலி மாநகரம் டவுண் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதைப் பொருளான கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்; 4 பேர் கைது

இதனையடுத்து சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைக்கண்ணு(எ) சுதாகர் (வயது 22), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் மகேஷ்(20), பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரவி மகன் செல்வராஜ்(39), தியாகராஜநகரைச் சேர்ந்த போத்திராஜ் மகன் விஜயகுமார்(34) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் கஞ்சா, பைக், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com