

சென்னை,
வீடுகளில் சூரியசக்தி மின்சார பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், பி.எம். சூர்ய கர்முப்தி பிஜிலி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு 2024-ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் மற்றொரு பிரிவாக, தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய 37 மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, மாவட்டத்திற்கு தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்குள்ள வீடுகள், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டிடங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் தெரு விளக்கு, தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்ப் அமைக்கப்படும். ஒரு சூரியசக்தி கிராமம் அமைக்க மத்திய அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையை தவிர்த்து, மீதமுள்ள 37 மாவட்டங்களில் சூரியசக்தி கிராமம் உருவாக்கும் பணிகளை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக, 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பசுமை கிராமம் உருவாக்கப்பட உள்ளது.
தற்போது, 37 மாவட்டங்களில் மாதிரி சூரிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக அதன் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு - கோவளம்
காஞ்சீபுரம் - தாமல்
பெரம்பலூர் - சிறுவாச்சூர்
தர்மபுரி - அதகப்பாடி
கிருஷ்ணகிரி - மகாதேவகொள்ளஹள்ளி
திருவண்ணாமலை - பாளையனூர்
அரியலூர் - செந்தூரை
ஈரோடு - மொடச்சூர்
கன்னியாகுமரி - செண்பகராமன்புதூர்
மதுரை - கம்பூர்
நாகை - பிரதாபராமபுரம்
மயிலாடுதுறை - மன்னம்பந்தல்
புதுக்கோட்டை - திருமயம்
ராமநாதபுரம் - தங்கச்சிமடம்
ராணிப்பேட்டை - வன்னிவேடு
சிவகங்கை - எடையமேலூர்
தென்காசி - அனைந்தபெருமாள் நந்தனூர்
திருவள்ளூர் - நடுக்குத்தகை திருவாரூர் - புலிவலம்
திருநெல்வேலி - தெற்கு வள்ளியூர்
திருச்சி - திருப்பைஞ்சீலி
தூத்துக்குடி - முடிவைத்தானேந்தல்
வேலூர் - சேனூர்
விருதுநகர் - பலவன்நத்தம்
திருப்பத்தூர் - ஆத்தூர்குப்பம்
திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டி
கள்ளக்குறிச்சி - நயினார்பாளையம்
சேலம் - பாப்பம்பாடி
திருப்பூர் - எல்லப்பாளையம்புதூர்
கோவை - அரசூர்
கடலூர் - கடம்புளியூர்
நீலகிரி - ஹப்பத்தலை
தஞ்சாவூர் - திருமலைசமுத்திரம்
கரூர் - மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி
நாமக்கல் - ஓ.ராஜபாளையம்
தேனி - அரண்மனைபுதூர்
விழுப்புரம் - திருச்சிற்றம்பலம்