தொழில் முனைவோர்களுக்கு ரூ.38½ லட்சம் வங்கிக்கடன்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கு ரூ.38½ லட்சம் வங்கிக்கடன்
தொழில் முனைவோர்களுக்கு ரூ.38½ லட்சம் வங்கிக்கடன்
Published on

வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்த்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளில் தொழில்சார் சமூக வல்லுனர்கள் மூலமாக தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் வாயிலாக வணிக திட்டம், தொழிலுக்கு ஏற்றவாறு சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இணைமானிய நிதி வங்கிக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலமாக தகுதியான தொழில் முனைவோர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர் பேசுகையில், இணை மானிய நிதி வங்கி கடன் பெறுபவர்கள் குறைந்த லாபத்தில் விற்பனையை அதிகரித்து தொழிலினை மேம்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து தொழில் முனைவோர்களுக்கு ரூ.38 லட்சத்து 44 ஆயிரத்து 974 அளவில் வரைவோலைகளை கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்வில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் மணிவண்ணன், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன், சீர்காழி பாரத வங்கி மேலாளா பாரதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com