

சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 117 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.