தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னையில் 23 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரியில் தலா 3 பேருக்கும், வேலூர், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 2 பேருக்கும், கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என தமிழ்நாட்டில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 188 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 39 பேர் வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com