சென்னை மெட்ரோவில் 10 ஆண்டுகளில் 39 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில் சேவை 2015 ஜுன் 29ம் தேதி தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோவில் 10 ஆண்டுகளில் 39 கோடி பேர் பயணம்
Published on

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மெட்ரோ ரெயில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2015 ஜுன் 29ம் தேதி கோயம்பேடு, ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகளில் மொத்தம் 39 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

முதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com