நெல்லையில் 3.9 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லை மாநகரம், பெரியார்நகர் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிஅரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் 3.9 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார்நகர் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிஅரசன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (வயது 25) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 3 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com