30 நாட்களில் 39 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்

30 நாட்களில் 39 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
30 நாட்களில் 39 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 39 பேருக்கு சம்மன் அனுப்பியும் கடந்த 10 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமை ஏட்டு கருப்புசாமி ஆகியோர் கடந்த 30 நாட்களில் 39 பேரையும் பிடித்து சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் கிருஷ்ணகிரி திரைப்பட வினியோகஸ்தர் கடத்தலில் தொடர்புடையவர்களை மடக்கி பிடித்தது உள்பட பல்வேறு வழக்குகளை திறமையாக இன்ஸ்பெக்டர் முருகேசன் கையாண்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனை, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com