3டி அனிமேஷன், வி.எப்.எக்ஸ் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் - மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்

பல்லாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற உள்ள விழாவில் 3டி அனிமேஷன் மற்றும் வி.எப்.எக்ஸ் (VFX) தொடர்பான நீண்டகால திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை மத்திய இணை மந்திரி எல். முருகன் தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் வாரியத்தின் சார்பில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) இணைந்து நடத்தும் 3டி அனிமேஷன் மற்றும் Visual Effects (VFX) தொடர்பான நீண்டகால, தங்குமிடமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா, இன்று (18.06.2026, வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு, பல்லாவரத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்வில் கண்டோன்மெண்ட் வாரிய அதிகாரிகள், NFDC பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com