

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடுசம்பவத்தின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.