4½ ஏக்கர் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசம்

நாசரேத் அருகே 4½ ஏக்கர் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.
4½ ஏக்கர் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசம்
Published on

நாசரேத்:

நாசரேத் அருகே 4 ஏக்கர் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

மின்னல் தாக்கியது

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் மணி நேரம் பலத்த மழை பெய்தது. அந்த சமயத்தில் நாசரேத் அருகில் உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தில் பலத்த மின்னல் வெட்டியது.

அப்போது, அங்குள்ள பனை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்தது. அந்த தீயானது குமார் என்பவர் பயிரிட்டிருந்த முருங்கை மரங்கள் பூ, காய்கள் மீது விழுந்து தீயில் கருகியது.

4 ஏக்கர்

இதனால் சுமார் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான முருங்கை மரங்கள், காய்களுடன் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சகாயசுமதி, கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பட்டன், தலையாரி முருகன் ஆகியோர் கருகிய முருங்கை மரங்களை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com