

ஊதியூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர்களை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
டாஸ்மாக் ஊழியர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் முரளி என்ற தங்கையா (வயது 33). இவர் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள பங்காம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 3 வருடங்களாக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தங்கையா, சூப்பர்வைசர் உக்கிரபாண்டி மற்றும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோவிந்தராஜ் ஆகியோர் கடையை மூடிவிட்டு அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
தாக்குதல்
அப்போது அங்கு வந்த பங்காம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (21), கோகுல்ராஜ் (28), மதிவாணன் (24), அய்யனார் (21) ஆகிய 4 பேரும் கடையை மூடிய பின்பு மது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கும், மது வாங்க வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது டாஸ்மாக் கடையில் இருந்த தங்கையா, உக்கிரபாண்டி, கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் கட்டை மற்றும் கத்தியால் மதுவாங்க வந்தவர்கள் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதில் காயம் அடைந்த தங்கையா, உக்கிரபாண்டி, கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் முத்துப்பாண்டி, கோகுல்ராஜ், மதிவாணன் , அய்யனார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற