சூதாடிய 4 பேர் கைது

நெல்லை அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 4 பேர் கைது
Published on

சிவந்திபட்டி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சிவந்திப்பட்டி காட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடியதாக, சிவந்திப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த முத்து (வயது 39), கார்மேகநகரை சேர்ந்த இசக்கி (35), வண்ணார் தெருவை சேர்ந்த கருப்பசாமி (38), பாலகுமார் (50) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com