நெல்லையில் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

நெல்லை மாநரில் ஒருவரை, 4 வாலிபர்கள் சேர்ந்து வழிமறித்து, மிரட்டி ரூ.1,000 பணத்தை பறித்துச் சென்றனர்.
நெல்லையில் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், மகிழ்ச்சிநகர் அருகே விருதுநகர் திருச்சுளியை சேர்ந்த இப்ராஹிம் (வயது 43) என்பவர் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), நரசிங்கநல்லூரை சேர்ந்த விஸ்வபாலன்(22), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராஜ்(21) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ்(21) ஆகிய 4 பேர் பணம் கேட்டு அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி ரூ.1,000 பணத்தை பறித்துள்ளனர்.

இதுகுறித்து இப்ராஹிம் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 4 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com