தி.மு.க.நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், வீட்டின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.
தி.மு.க.நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் கும்பல் ஒன்று நேற்று வெடிகுண்டு வீசி உள்ளது. இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.

அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மாமுல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், மேலும் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com