கஞ்சா விற்பனை குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியைச் சேர்ந்த 4 பேர் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.
கஞ்சா விற்பனை குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை,

திருநெல்வேலியைச் சேர்ந்த சாமிநாதபாண்யடின் மகன் துளசி சாமிநாதபாண்டியன் (வயது 19), சித்திரைபாபு மகன் சின்னத்தம்பி(எ) ராசுக்குட்டி(26), லெட்சுமணன் மகன் ராம்சூர்யா(எ) ரன்(24), லெட்சுமணன் மகன் அபீகுமார்(22) ஆகிய 4 பேர் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி மேற்சொன்ன 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com