திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தில் தென்பெண்ணையாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மதன்மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், எல்ராம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் திருடி வந்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் தங்கராசு, தாண்டவராயன் மகன் பெருமாள், திருவேங்கடம், சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com