மரத்தின் மீது ஆட்டோ மோதி 4 பேர் காயம்

கலவை அருகே மரத்தின் மீது ஆட்டோ மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.
மரத்தின் மீது ஆட்டோ மோதி 4 பேர் காயம்
Published on

கலவை

ராணிப்பேடைட மாவட்டம் ஆற்காடு தாலுகா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). சரக்கு ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று தனது மனைவி, மகன்கள் மற்றும் மகளுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் உறவினரை பார்க்க ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும் போது கலவை கனியன்தாங்கல் கிராமத்தின் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com