

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேல இலந்தைகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அய்யனார் ஊத்து, வடக்கு தெருவை சேர்ந்த வெயில்துரை (வயது 27) என்பவருக்கு சொந்தமான கடையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அங்கே அவர் அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வெயில்துரையை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.