ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் இந்திரா நகரில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 554 பட்டாசு பெட்டிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com