கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவை மாவட்டம் வடவள்ளியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வடவள்ளி,

கோவை வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லக் ஷயா. இவர்களின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாயார் பிரேமாவும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேஷின் வீட்டில் இருந்து இன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், ராஜேஷின் தாயார் பிரேமா, மனைவி லக் ஷயா, மகள் யக்சிதா ஆகியோர் விஷம் குடித்தும் வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர்.

மேலும் அவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் பிணமாக கிடந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com