சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
Published on

முசிறி சுந்தர் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 39). இவர் மோட்டார் சைக்கிளில் மனைவி வான்மதி (32), மகன்கள் ரோகித் தஞ்சன், விபின் ரோஜன் ஆகியோருடன் பொன்னாங்கண்ணிபட்டி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். வடுகபட்டி ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். இதில் கோவிந்தராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com