கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
Published on

ஈத்தாமொழி:

வடக்கு சூரங்குடியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னவண்ணான் விளையைச் சேர்ந்த காசி மகன் ரவிஸ் (27) என்பவர் சாமியாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்ற சுடலை மணி (37) உள்பட 7 பேர் சேர்ந்து நீ எப்படி சாமி ஆடலாம் எனக் கூறியபடி அவரை கம்பி மற்றும் கல்லால் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் சுடலைமணி ஆசைத்தம்பி, வெற்றிவேல், மற்றும் வெகின் துரை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகின்றனர்.

--

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com