சாத்தான்குளத்தில் பந்தய வேகத்தில் பைக் ஓட்டிய 4 பேர் கைது: 4 பைக்குகள் பறிமுதல்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் பைக்குகளில் சென்ற 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாத்தான்குளத்தில் பந்தய வேகத்தில் பைக் ஓட்டிய 4 பேர் கைது: 4 பைக்குகள் பறிமுதல்.
Published on: 

தூத்துக்குடி,

சாத்தான்குளம் பகுதியில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பந்தய வேகத்தில் பைக்குகளை ஓட்டிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

அதிவேகமாக பைக் ஓட்டிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே காமராஜர் சிலை பகுதியில், கடந்த 20.10.2026 அன்று அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் பைக்குகளில் சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

4 வாலிபர்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்

அந்த விசாரணையில், சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராஜ் மகன் தமிழரசன் (வயது 22), மோகன் மகன் முத்து(19), நடராஜன் மகன் கோகுலகண்ணன்(21) மற்றும் பட்டுராஜ் மகன் தனுஷ் சூர்யா(22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், பைக் ரேஸ், பைக் வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com