ஆழ்வார்திருநகரியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக 4 பேர் சுற்றித் திரிந்தனர்.
4 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே கையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

4 பேர் கைது:

இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீராசாமி வழக்குப்பதிவு செய்து, கையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்தவர்களான ஆழ்வார் (வயது 34), முருகன்(39), கொங்கராயகுறிச்சி பகுதியைச் சேர்ந்த சுதாகர்(31) மற்றும் கீழநத்தம் பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி(41) ஆகிய 4 பேரை கைது செய்து, வாள் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com