தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டாசில் கைது

4 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டாசில் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, பாலியல் தொந்தரவு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவுப்படி, சாத்தான்குளம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம், ஆர்.சி. சர்ச் தெருவைச் சேர்ந்த மரியஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங்(23), என்பவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குரும்பூர், ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் முத்துராமலிங்கமும்(25), கடம்பூர் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கடம்பூர் அரண்மனை தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சுடலை கண்ணன்(39) என்பவரும், கோவில்பட்டி பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 2ம்கேட் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமலக்ஷ்மணன்(27) ஆகிய 4 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com