கொலை முயற்சி வழக்கில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் 4 பேர் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் போலீஸ் கவனத்திற்கு வந்தது.
கொலை முயற்சி வழக்கில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் இசக்கிமுத்து(எ) முகேஷ் (வயது 20), பாஸ்கர் மகன் சுனில்ராஜ்(19), மகேஷ் மகன் முத்து(21), மேகலிங்கம் மகன் கணேசமூர்ததி(22) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்சொன்ன நபர்கள் 4 பேரும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்தியது போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (2.8.2025) அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com