புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!
Published on

புதுக்கோட்டை,

திருநெல்வேலியை சேர்ந்த நான்கு பேர் வாடகை காரில் மதுரையில் இருந்து திருச்சி நேக்கிச் சென்று கெண்டிருந்தனர். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு பகுதியில் அரச மர பேருந்து நிறுத்தம் அருகே வந்தகெண்டிருந்தபேது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் பின்புறம் கார் மோதி பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடும்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுயநினைவு இல்லாததால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com