தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி நகை பறிப்பு: 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி காலங்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபரை தாக்கி, நகை பறிப்பில் 4 பேர் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி நகை பறிப்பு: 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி காலங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் சபரி வாசகன் (வயது 21) என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு தாக்கி நகை பறித்த வழக்கில், ஜார்ஜ் ரோடு ஜோசப் சந்தியா மகன் பொவின்ராஜ்(20), மினி சகாயபுரம் டோம்னிக் மகன் ஆக்னல்(21), பாத்திமாநகர் அலாய்சியஸ் கோஸ்தா மகன் பென்கர்(23) மற்றும் ஆஸ்வால்ட் மகன் இதழ்பட்டு(23) ஆகிய 4 பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் வீமராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 3) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com