புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி:-

போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜிம்மாண்டியூரை சேர்ந்த பெருமாள் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் உத்தனப்பள்ளி போலீசார் நஞ்சாரெட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற லதா (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பழனி (52), ரேவதி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com