புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

நெல்லை தச்சநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்.
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
Published on

தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தச்சநல்லூர் அருகே உள்ள வையாபுரிநகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தாழையூத்தை சேர்ந்த குமார் (வயது 46), பாளையங்கோட்டையை சேர்ந்த சஞ்சீவ் (23), பெருமாள் (35), விருதுநகரை சேர்ந்த ஜேசுராஜ் (36) ஆகியோரை பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்கள் 31 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்கச் சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், சஞ்சீவ், பெருமாள், ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com