கள் இறக்கிய 4 பேர் கைது

ஊ.மங்கலம் அருகே கள் இறக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள் இறக்கிய 4 பேர் கைது
Published on

கம்மாபுரம்,

ஊ.மங்கலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலம் கிராமத்தில் பனை மரத்தில் இருந்து கள் இறக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊ.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் வி.சாத்தமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிராமத்தில் பனைமரத்தில் இருந்து 4 பேர் கள் இறக்கி கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பரமசிவம் (வயது 41), முனுசாமி மகன் சுதாகர் (43), ஆனந்தன் மகன் மதிவாணன் (38), சுப்பிரமணியன் மகன் முத்துசாமி (52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பரமசிவம் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com