தமிழகத்தில் 4 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 4 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மதுரை நகரம் - 102.92° பாரன்ஹீட் (39.4°C)

மதுரை விமான நிலையம் - 102.2° பாரன்ஹீட் (39.0°C)

கரூர் பரமத்தி - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

பாளையங்கோட்டை - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com