கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு!

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு!
Published on

கோவை,

கோவை இருகூர், மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (53). இவரது இளைய மகள் நந்தினி உடுமலையில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சாந்தி கடந்த 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உடுமலைக்குச் சென்றார். இதனிடையே, கடந்த 18ம் தேதி சாந்தியின் மூத்த மகள் ரேணுகாதேவி வீட்டிற்கு வந்து மீன்களுக்கு உணவளித்துவிட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை சாந்தியின் வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் பார்த்து அக்கம் பக்கத்தினர், சாந்திக்கு தகவல் அளித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி, வீட்டிற்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் 1 பவுன் கம்மல், மோதிரம் என மொத்தம் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாந்தி சிங்கா நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் வழக்குப்திவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com