பைக் ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது - நள்ளிரவிலும் விரட்டி பிடித்த போலீசார்

சென்னை கொருக்குபேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பைக் ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது - நள்ளிரவிலும் விரட்டி பிடித்த போலீசார்
Published on

சென்னையில் பைக்ரேஸ் என்ற போர்வையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு, கொருக்குபேட்டையில் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்யும்படி, போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சிசரத்கார் இரவு ரோந்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை போலீசார் கண்காணித்தனர். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் குறிப்பிட்ட 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களது பெயர் கொருக்குபேட்டை ராகுல் (வயது 21), அஜய் (18), லோகேஷ் (20), வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவம்சி (19) என்று தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com